சுற்றுலா பயணியரை நம்பியுள்ள வர்த்தகர்கள், வருவாய்க்கு வழியின்றி தவித்து வருகின்றனர். சீனாவில் பலரது உயிரை பறித்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும், இரண்டு உயிர்களை பலி வாங்கியுள்ளது.கொரோனா, சுற்றுலா வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம் வந்து செல்லும் மாநிலங்களில், தமிழகம் முதன்மையானதாக விளங்குகிறது.
குறிப்பாக, மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், எப்போதும், சுற்றுலா பயணியருக்கு பஞ்சம் இருக்காது.தற்போது, கொரோனா அச்சம் காரணமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் வருகை, பெருமளவு குறைந்து விட்டது. தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.
இதனால், பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி உள்ளன.சுற்றுலா பயணியரை குறி வைத்து, வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், ஓட்டல்கள், பிளாட்பார கடை வாசிகளுக்கு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள்மிகுந்த கவலையில் உள்ளனர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கரில், ஏலக்காய் சாகுபடியாகிறது. ஏலக்காய் ஸ்பைசஸ் வாரியத்தின், இ - ஏல மையம் மூலம், இவை விற்பனை செய்யப்படுகின்றன. ஏல மையங்கள், கேரளாவின் புத்தடி, தமிழகத்தின் போடியில் செயல்படுகின்றன.இங்கு, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 75 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு வரும். கொரோனா பீதியால், 14ம் தேதி முதல், ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தினமும், 14 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து, ஏலக்காய் வாங்கி இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.செயற்கை வைரம்தங்க நகைகள் மட்டுமின்றி, கவரிங் நகைகளுக்கும், செயற்கை வைரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.செயற்கை வைரக்கற்கள் தயாரிப்பதற்கான இயந்திரம், அதற்கான உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து தான் வாங்கப்படுகின்றன.
கொரோனா தாக்கத்தால், சீனாவில் இருந்து மூலப்பொருட்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், செயற்கை வைரம் தயாரிக்கும் தொழிலில் முடக்கம் ஏற்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள் அனைவரும், 'மாஸ்க்' அணிந்து பணியாற்றுகின்றனர். ராணுவ கேன்டீன் மூடப்பட்டுள்ளது.
கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், தீவிர சுகாதார பணிகள் மேற்கொண்டு வருவதுடன், வெலிங்டன் ஏரி பூங்காவிற்கு, சுற்றுலா பயணியர் வர தடை விதித்து, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.ராணுவ அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா அச்சத்தால், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லவும், வெளியில் இருப்பவர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
'விடுமுறையில் சென்றுள்ளவர்களுக்கு, விடுப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவமனையில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த, ஏழு பேர், தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள் குறித்து ஆய்வு செய்ய, கடந்த வாரம் சென்னை வந்தனர். பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அக்குழுவினர், நேற்று முன்தினம் ஈரோடு வந்தனர்.ஈரோட்டில் தங்கியிருந்தபோது, குழுவைச் சேர்ந்த, 49 வயது ஆணுக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை, தாய்லாந்துக்கே திருப்பி அனுப்ப திட்டமிட்டு, நேற்று முன்தினம் இரவு, கோவை விமான நிலையம் அனுப்பினர்.
விமான நிலையத்தில், மருத்துவக் குழுவினர் சோதனையில், அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அவர், கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தம், சளி மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளர்.
அரியலுார் மாவட்டம், காங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 25. துபாயில் வேலை செய்தவர், 12ம் தேதி, விமானம் மூலம் சென்னை வந்தார். மருத்துவ குழுவினர் பரிசோதனையில், பார்த்திபனுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிந்தது. சொந்த ஊரான காங்குழி கிராமத்திற்கு வந்த பின், நேற்று முன்தினம் இரவு, அவருக்கு சளி, இருமலுடன் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில், பார்த்திபன் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமான சேவைகள் நிறுத்தம்ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சார்பில், மார்ச், 28 முதல், திருச்சியில் இருந்து, அரபு நாடான கத்தார் தலைநகர் தோகாவுக்கு, வாரத்துக்கு மூன்று விமான சேவை, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபிக்கு, வாரம் நான்கு விமான சேவை துவங்க இருந்தது. கொரோனா அச்சம் காரணமாக, தற்போது இந்த சேவையை, மே 15ம் தேதி துவங்குவதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
" alt="" aria-hidden="true" />